Monday, January 18, 2010

வந்தே மாதரம்-தாய் மண்ணே வணக்கம்


பாடியவர்: ஏ.ஆர்.ரஹ்மான்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
எழுதியவர்:வைரமுத்து
வருடம்: 1997

Get this widget
|
Track details
|
eSnips Social DNA

THE BLAST-வா நண்பனே


இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள்: கமல்ஹாசன், யுவன்
வருடம்: 1999

Get this widget
|
Track details
|
eSnips Social DNA

THE BLAST-உன் நினைவே


இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்: யுவன்
வருடம்: 1999

Get this widget
|
Track details
|
eSnips Social DNA

THE BLAST-போராடு போராடு


இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள்: நாகூர் ஹனிஃபா, யுவன்
வருடம்: 1999

Get this widget
|
Track details
|
eSnips Social DNA

THE BLAST-பூவே புதிரே


இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்: ஸ்ரீநிவாஸ்
வருடம்: 1999

Get this widget
|
Track details
|
eSnips Social DNA

THE BLAST-ஒரு நாள்


இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்: யுவன்
வருடம்: 1999

Get this widget
|
Track details
|
eSnips Social DNA

THE BLAST-ஒளி வீசும்


இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்: யுவன்
வருடம்: 1999

Get this widget
|
Track details
|
eSnips Social DNA

THE BLAST-நீ தானே


இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்: யுவன்

வருடம்: 1999

Get this widget
|
Track details
|
eSnips Social DNA

Sunday, January 17, 2010

THE BLAST-மாமா மாமா


இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன்,நித்யஸ்ரீ
வருடம்: 1999

Get this widget
|
Track details
|
eSnips Social DNA

THE BLAST-சிப்பிக்குள்ளே முத்தை


இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: கமல்,ராஜலக்ஷ்மி யுவன்
வருடம்: 1999


Get this widget
|
Track details
|
eSnips Social DNA

THE BLAST-அவள் தேவதை


இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள்: கமல்ஹாசன், யுவன்
வருடம்: 1999

Wednesday, January 13, 2010

PICTURE OF BLOOD-பூ வாசல் திறந்தால்


பாடல்: பூ வாசல் திறந்தால்
பாடியவர்கள்: திப்பு, கூவை நந்தன்,சாகர்,நவீன்,ரோஹித்,அனிதா,கௌதம்
இசை:கார்த்திக்
எழுதியவர்: அரூர் புதியவன்
தயாரிப்பு: ஹபீப்
இயக்கம்: புஹாரி

வருடம்: 2007


பல்லவி

பூ வாசல் திறந்தால்
வாசம் மயக்கும்
வாழ்க்கை இனிக்கும்

போர் வாசல் திறந்தால்
வாழ்க்கை எரிக்கும்
ஜீவன் மரிக்கும்

இதயமெல்லாம்
இணைந்திடும் நாளெல்லாம்
என் பகைமை வீழாதோ

அதிசயமாய் அகிலமும் மாறியே
அமைதியிலே வாழாதோ

ஓ - மனித மனமே
மடியும் இனமே
மயக்கம் தெளிவாய்

போர், உலகில் வெறியும்
எரியும் வரையில்
தினமும் அழிவாய்(முனைவாய்)

சரணம்

ஒரு ஜீவன்
உயிர் வாழ
நீ பாதை காட்டினாய்

முழு உலகம்
உயிர் வாழ
வகை செய்தோன் நீயே

இது உனக்கு
இது எனக்கு
என பிரிக்கும் உலகம்
ஒன்றானால் நன்றாகும்;
நம் துன்பம் நீங்கிடும்

ஒரு நாட்டை ஒரு நாடு
களவாடும் பிழை தான்
இதனாலே மண்மேலே
தினம் கண்ணீர் அலை தான்

எது புனிதம்
எதில் புனிதம்
என தேடும் மானிடா
இவ்வுலகில் மனிதனைப் போல்
ஒரு புனிதம் ஏதடா

இணையங்களால் இணைந்திடும் மானிடா
இதயங்களால் இணைவோம்-வா

எரிந்திடுதே அனுதினம் உலகமே
அன்பினில் நீ நனைவாயா

போர் போதும் தோழா
மனிதம் வாழ வைப்போம்
ஓர் தாயின் மக்கள்
ஒன்று சேர்ந்து நிற்போம்
ஒன்றாவோம்.

S5-இசை-Rock Me

பாடல்: Rock Me
பாடியவர்கள்: பென்னி தயாள், அனைதா, அர்ஜூன், பார்கவி, ஸ்வேதா
இசை: பிரவின் மணி
வருடம்: 2004


Get this widget
Track details
eSnips Social DNA

S5-இசை-இசையுடனே

பாடல்: இசையுடனே
பாடியவர்கள்: பென்னி தயாள், அனைதா, அர்ஜூன், பார்கவி, ஸ்வேதா
இசை: பிரவின் மணி
வருடம்: 2004


Get this widget
Track details
eSnips Social DNA

பல்லவி

இசையுடனே காதல்
உயிரினை தீண்டும் என் பாடல்

உலகினில் கேட்கும் நெஞ்சை
ஏதோ செய்யும் இசை

வானம் பாடி... போலே
வாழலாம் வாழ்வே

தாளம் போட்டு... கேட்டே
இனி பாடலாம் காற்றே

இசையே உயிராய் வாழ்வேனே
இசை தெய்வம் என்பேனே

பாடல் எங்கே
என் ஜீவனும் அங்கே-இசையுடனே

சரணம்

காற்றே இல்லை என்றால்
பாடலே மூச்சு

பாட்டே இல்லை என்றால்
இனி தேவையா மூச்சு

வானம் இசையை கேட்டாளே
மழை தூறல் தந்தாளே

பூவே பூவே
இசை தான்
எங்கள் வாழ்வே-இசையுடனே

S5-இசை-இரவும் பகலும்(Remix)

பாடல்: இரவும் பகலும்(Remix)
பாடியவர்கள்: பென்னி தயாள், அனைதா, அர்ஜூன், பார்கவி, ஸ்வேதா
இசை: பிரவின் மணி
Get this widget Track details eSnips Social DNA

S5-இசை-இரவும் பகலும்

பாடல்:இரவும் பகலும்
பாடியவர்கள்: பென்னி தயாள், அனைதா, அர்ஜூன், பார்கவி, ஸ்வேதாஇசை: பிரவின் மணி
வருடம்: 2004

Get this widget
Track details
eSnips Social DNA

S5-இசை-நினைத்தால் முடியாதா

பாடல்: நினைத்தால் முடியாதா
பாடியவர்கள்: பென்னி தயாள், அனைதா, அர்ஜூன், பார்கவி, ஸ்வேதா
இசை: பிரவின் மணி
வருடம்: 2004

Get this widget
Track details
eSnips Social DNA



பல்லவி-1

நினைத்தால் முடியாதா
சிறு மூங்கில் தான் குழலாகின்றதே

நினைத்தால் முடியாதா
பல துளி சேர்ந்தாலே
ஒரு கடலாகின்றதே

இரவும் காத்திருந்தால்
காலையாகுமே

பிறை ஒன்று ஒன்றாய் சேர்ந்தே
ஒரு பௌர்ணமி ஆகுமே

பல்லவி-2

வானம் வீழ்ந்தால்
அதை ஏந்திக் கொள்வோமே

ஒரு பூமி ஒரு வாழ்க்கை
வாழ்ந்து பார்ப்போமே

காற்று நின்றால்
அதை வீச செய்வோமே

தினம் தோறும் புது நாளாய்
மாறிப் போகும் நீ நினைத்தாலே

சரணம்-1

நினைத்தால் ஒரு பாறைதான்
புதிதான சிலையாகின்றதே

நினைத்தால் அந்த வானம் தான்
அறிவாலே வசமாகின்றதே

வார்த்தை காத்திருந்தால்
கவிதையாகுமே

மலர் ஒன்று ஒன்றாய் சேர்ந்து
புது மாலை ஆகுமே-வானம்

[Hey I got something to tell you all

cos i hav been thinkin abt d damn
we had to rule in our heads... just checkin

i got this feelin sinkin
deep wid my plans... do breakin

feelin like we back to have it again
we gotta listen to our hearts
cos im clearing again

i hav been sinkin
and u know
abt these things in my mind
and u know that im dying]

சரணம்-2

உன்னை அறிந்தாலே
வாழ்க்கையே இன்பமே

வாழத் தெரிந்தாலே
பூமியே இன்பமே

பூமி சிரித்தாலே
யாவுமே இன்பமே

என்றும் இன்பம் காண்போமே-வானம்

S5-இசை-மலரே மலரே(Remix)

பாடல்: மலரே மலரே-Remix
பாடியவர்கள்: பென்னி தயாள், அனைதா, அர்ஜூன், பார்கவி, ஸ்வேதா
இசை: பிரவின் மணி
வருடம்: 2004


Get this widget
Track details
eSnips Social DNA



பல்லவி-1

மலரே மலரே
ஒரு நாள் அழகே

உலகின் சிறு தேனீ
மறந்தால் வசந்தமே

மழையே மழையே
இதமான தூறலே

இதயம் நனைந்தாலே
அதில் ஓர் இனிமையே

பல்லவி-2

மலரே மலரே
மழையே மழையே

இனிமை சுகமே
அழகே...
இயற்கை கவிதையே... கவிதையே

சரணம்-1

நதியே நதியே
நடந்தால் இசையே

சலங்கை அணியாமல்
நடனம் நடக்குதே

நிலவே நிலவே
முகம் காட்டும் பாவையே

இரவை அழகாக்கும்
இளமை அழகியே

மலரே மழையே
நதியே நிலவே

இனிமை சுகமே
அழகே...
இயற்கை கவிதையே... கவிதையே

சரணம்-2

பனியே பனியே
உலகின் திரையே

விழுந்தால் பறந்தோடும்
கனவின் உருவமே

காலை மாலை மாற்றம்
அந்த வானின் மாயஜாலம்

இளம் பூக்கள்
ஆடும் ஆட்டம்
அழகே... இயற்கையே

மலரே மழையே
நிலவே நதியே

பனியே மலரே
அழகே...
இயற்கை கவிதையே... கவிதையே

S5-இசை-மலரே மலரே

பாடல்: மலரே மலரே
பாடியவர்கள்: பென்னி தயாள், அனைதா, அர்ஜூன், பார்கவி, ஸ்வேதா
இசை: பிரவின் மணி
வருடம்: 2004








மலரே மலரே




SS Music தொலைக்காட்சியின் போட்டி ஒன்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பாடகர்கள் இணைந்து உருவாக்கியது தான் S5 என்ற இசைக்குழு.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இதில் எவருமே தமிழ்நாட்டைச் சார்ந்தவரல்ல.

மலரே... மலரே பாடல் நிச்சயம் அருமையான பாடல் தான். ஆனால் அந்த பாடலின் மெட்டு Chris De Burgh ன் ஆங்கில பாப் பாடலான When Winter Comes என்பதன் மறுபதிப்பு என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

When Winter Comes


பல்லவி

மலரே மலரே
ஒரு நாள் அழகே

உலகின் சிறு தேனீ
மறந்தால் வசந்தமே

மழையே மழையே
இதமான தூறலே

இதயம் நனைந்தாலே
அதில் ஓர் இனிமையே

மலரே மலரே
மழையே மழையே

இனிமை சுகமே
அழகே...
இயற்கை கவிதையே... கவிதையே

சரணம்-1

நதியே நதியே
நடந்தால் இசையே

சலங்கை அணியாமல்
நடனம் நடக்குதே

நிலவே நிலவே
முகம் காட்டும் பாவையே

இரவை அழகாக்கும்
இளமை அழகியே

மலரே மழையே
நதியே நிலவே

இனிமை சுகமே
அழகே...
இயற்கை கவிதையே... கவிதையே

சரணம்-2

பனியே பனியே
உலகின் திரையே

விழுந்தால் பறந்தோடும்
கனவின் உருவமே

காலை மாலை மாற்றம்
அந்த வானின் மாயஜாலம்

இளம் பூக்கள்
ஆடும் ஆட்டம்
அழகே... இயற்கையே

மலரே மழையே
நிலவே நதியே

பனியே மலரே
அழகே...
இயற்கை கவிதையே... கவிதையே

காதல் வேதம்-நீ என்பதில்



பாடல்: நீ என்பதில்
பாடியவர்: ஹரிஹரன்
எழுதியவர்:வைரமுத்து
இசை:உத்பால் பிஸ்வாஸ்
வருடம்: 1998



Get this widget Track details eSnips Social DNA




பல்லவி

நீ என்பதில்
நானும் அடங்கும்
நானென்பதில் நீயும் அடங்கும்

நாம் என்ற சொல்லில்
உலகம் முழுதும் அடங்கும்-நீ

சரணம்-1

கண்ணாடி வளையாக இருந்தால்
உன் கை கொண்ட மென்மை ரசிப்பேன்

கதை பேசும் கொலுசாக இருந்தால்
உன் காலோடு பாடி கிடப்பேன்

போயும் போயும்
நானும் ஒரு ஆணாகினேன்
ஏனாகினேன்-நீ

சரணம்-2

கார்காலம் உன் கூந்தல் கண்ணே
அதில் நிலவொன்று காயும் முன்னே

பகலோடு விண்மீன்கள் பார்த்தேன்
மீனல்ல உன் கண்கள் பெண்ணே

காலங்களும் உன்னைக் கண்டு
தடுமாறுதே
தடம் மாறுதே-நீ

காதல் வேதம்-நட்சத்திர பூங்காவில்



பாடல்: நட்சத்திர பூங்காவில்
பாடியவர்: ஹரிஹரன்
எழுதியவர்:வைரமுத்து
இசை:உத்பால் பிஸ்வாஸ்
வருடம்: 1998



Get this widget Track details eSnips Social DNA




பல்லவி

நட்சத்திர பூங்காவில்
நீ மட்டுமே வெண்ணிலா-2

நூறு பெண்கள் வந்தாலும்
நீ மட்டுமே என் நிலா-2

சரணம்-1

உன்னை விட யாரும்
அழகில்லை என்று-2
நீதிமன்றம் போய் உரைப்பேன்

உன்னை விட யாரும்
அழகென்று சொன்னால்
எந்தன் கண்ணை நான் எரிப்பேன்

என் காதலி...

காலடியில் நான் மரிப்பேன்-2-நட்சத்திர

சரணம்-2

வார்த்தைகள் செய்த
தவங்களில் தானே-2
உன் உதடு தீண்டியது

மலர்களும் செய்த
தவங்களில் தானே
உந்தன் குழல் சூடியது

என் ஜீவனே...

உன் உடல் சேர்ந்திருக்க
என்னத் தவம் நானிருக்க-நட்சத்திர

காதல் வேதம்-மலையும் நதியும்



பாடல்: மலையும் நதியும்
பாடியவர்கள்: ஹரிஹரன்,சுஜாதா
எழுதியவர்:வைரமுத்து
இசை:உத்பால் பிஸ்வாஸ்
வருடம்: 1998



Get this widget Track details eSnips Social DNA




பல்லவி-1

மலையும் நதியும்
நிலமும் ஒரு நாள்
மறையும் காலம் வந்தாலும்
காற்று நின்றாலும்

நீ... பிரியாதிரு
சகியே... பிரியாதிரு

பல்லவி-2

வானும் மண்ணும்
நீரும் ஒருநாள்
மறையும் காலம் வந்தாலும்
காற்று நின்றாலும்

நீ... பிரியாதிரு
உயிரே... பிரியாதிரு

பாதி ஜீவன் பிரியும் போது
மீதி வாழுமா

சகியே பிரியாதிரு
பெண்மையே பிரியாதிரு

சரணம்-1

முள்ளிலே கிடந்தாலும்
ஆணி மேல் நடந்தாலும்-2

கண்மணி மெய் தீண்டினால்
காயங்கள் பூவாகும்

காதலி கண் ஜாடையில்
சிலுவையும் சிறகாகும்

எந்த மாதமும்
பௌர்ணமியே...தேயாதிரு
அங்குலமும் நீங்காதிரு-வானும்

சரணம்-2

வண்டு வந்து தேனுண்டால்
பூவின் வலி யார் கண்டார்

நேசம் மட்டும் நீ கண்டாய்
நெஞ்சின் வலி யார் கண்டார்

பூக்களில் கண்ணீர் துளி
பொங்குதே யார் தந்தார்

சிந்திய கண்ணீரிலும்
உன் முகம் தானாடுது

காதல் ஒரு போர் போன்றது
என்பதே நான் கண்டது

கண்கள் கேட்குதே
காதலனே... பிரியாதிரு

கண் திரையில் மறையாதிரு-மலையும்

சரணம்-3

சூரியனும் அணைந்தாலும்
சந்திரனும் அவிந்தாலும்-2

உன் கண்ணில் சந்திரனுண்டு
இரவோடு வலம் வருவேன்

மறு கண்ணில் சூரியனுண்டு
பகலோடு வலம் வருவேன்

உந்தன் கண்களை
காதலியே... மூடாதிரு

கையருகே நீங்காதிரு-மலையும்

காதல் வேதம்-கண்ணில் என்னென்ன மயக்கம்



பாடல்: கண்ணில் என்னென்ன மயக்கம்
பாடியவர்: ஹரிஹரன்
எழுதியவர்:வைரமுத்து
இசை:உத்பால் பிஸ்வாஸ்
வருடம்: 1998



Get this widget Track details eSnips Social DNA



பல்லவி

கண்ணில் என்னென்ன மயக்கம்
வார்த்தை நெஞ்சோடு துடிக்கும்-2

சோகம் சந்தோஷம் கலந்து
என் நெஞ்சில் பாரங்கள் கனக்கும்-கண்ணில்

சரணம்-1

பாலைவனமொன்றில் விழுந்தேன்
நீரே இல்லாமல் அலைந்தேன்
உயிரே உலர்கின்ற நேரம்
உயிரில் துளியாக விழுந்தாய்-2

வாழ்வில் நான் கண்ட வரமே
யாரும் பாடாத ஸ்வரமே-2

பொங்கும் மின்சாரச் சிரிப்பில்
எந்தன் வாழ்வு
அர்த்தங்கள் பெறுமே-கண்ணில்

சரணம்-2

காயம் ஆறாத போதும்
கண்ணீர் என் காயம் ஆற்றும்
கண்ணீர் ஆற்றாத போதும்
உன் கண்கள் காயங்கள் ஆற்றும்-2

பூமி தொடாத மழைப் போல்
புனிதம் உன் கண்ணில் பார்த்தேன்-2

ஜீவன் போகின்ற போதும்
சின்னக் கைகள்
என் நெஞ்சில் சேர்ப்பேன்-கண்ணில்

காதல் வேதம்-இருதயம் இடம் மாறி துடிக்கும்



பாடல்: இருதயம் இடம் மாறித் துடிக்கும்
பாடியவர்: ஹரிஹரன்
எழுதியவர்:வைரமுத்து
இசை:உத்பால் பிஸ்வாஸ்
வருடம்: 1998



Get this widget Track details eSnips Social DNA

பல்லவி

இருதயம் இடம் மாறித் துடிக்கும்
வலது புறத்திலே-2

நீராடும் நதியொன்றிலே
நிலவொன்று பார்த்தேன்

இது ஒன்றும் கனவில்லையே
நான் உன்னை கேட்டேன்

இது தானே காதல் என்று
நீ சொல்லக் கேட்டேன்

சரணம்-1

பிடிமானம் இல்லாமலே
நான் வாழ்ந்து வந்தேன்
உன் ஆடை நுனி கண்டதும்
நான் பற்றிக் கொண்டேன்-2

உன் காற்றை
நான் கடன் வாங்கி
உயிர் வாழ்கிறேன்-இருதயம்

சரணம்-2

ஒரு பார்வை நீ பார்க்கையில்
உடைகின்ற நெஞ்சம்
மறு பார்வை நீ பார்க்கையில்
ஒன்று சேரும் கொஞ்சம்-2

உன் கண்ணை தண்டிக்க
ஏதும் விதியில்லையே-இருதயம்

காதல் வேதம்-இரு கண்ணும்



பாடல்: இரு கண்ணும்
பாடியவர்கள்: ஹரிஹரன்,சுஜாதா
எழுதியவர்:வைரமுத்து
இசை:உத்பால் பிஸ்வாஸ்
வருடம்: 1998



Get this widget Track details eSnips Social DNA




பல்லவி

இரு கண்ணும் தூங்காமலே
ஒரு சொல்லும் பேசாமலே
வாழ்வோம் ஆயிரம் காலம்
மௌனங்கள் தானே காதலின் வேதம்-2

சரணம்-1

உரையாடவே மொழி தேவையே
உறவாடினால் மொழி ஊமையே

மனதோடு தான் பல ஆசையே
விரல் பேசுமே பரிபாஷையே-2-இரு கண்ணும்

சரணம்-2

ஓசையே கொஞ்சம் ஓய்வெடு
மௌனமே வந்து பாய்கொடு

வார்த்தையே நீ போய்விடு
மன்மதா உன் வில்லெடு-இரு கண்ணும்

சரணம்-3

உடல் சேரும் இன்பம் ஏனடி
உயிர் தேடும் தேடல் தானடி

மொழி தீர்ந்து போகும் வேளையில்
மோட்சங்கள் தோன்றும் பாரடி-2-இரு கண்ணும்

Tuesday, January 12, 2010

காதல் வேதம்-என் நெஞ்சில் தூங்கவா



பாடல்: என் நெஞ்சில் தூங்கவா
பாடியவர்கள்: ஹரிஹரன், சுஜாதா
எழுதியவர்:வைரமுத்து
இசை:உத்பால் பிஸ்வாஸ்
வருடம்: 1998



Get this widget Track details eSnips Social DNA



என் நெஞ்சில் தூங்கவா

பல்லவி

என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே

வீட்டில் யாரும் இல்லை
வெளியில் யாரும் இல்லை

ஊரில் ஒரு ஓசையில்லை
பால் போல வா வா
பள்ளி கொள்ள நீ வா-என் நெஞ்சில்

சரணம்-1

விண்மீனும் மேகங்களும்
கண் தூங்கும் போது
வாய்முத்தம் நீ சிந்தவா
வாய்ப்புள்ள போது-2

அடி நெஞ்சு தள்ளாடியே
அலை பாயும் போது
தலை சாய்வதேது-என் நெஞ்சில்

சரணம்-2

நான் உன்னை
பார்த்து பார்த்து தேய்கிறேன்
முகில் என்னும் ஆடை கொண்டு
மூடினேன்-2

முகில் என்னும்
துகில் கொள்ளவே
உன் கையை நீ நீட்டினால்
நான் என்ன தான் செய்வதோ-என் நெஞ்சில்

சரணம்-3

என் உள்ளம்
வெறும் கோப்பை தான்
தடுமாறும் கண்ணே
உன் காதல் நீரூற்றினால்
ஆடாது பெண்ணே-2

நீ வந்து என் கோப்பையை
நிறைவாக மாற்று
உடையாமல் ஊற்று-என் நெஞ்சில்

காதல் வேதம்-அழகான காதல் நிலா



பாடல்: அழகான காதல் நிலா
பாடியவர்: ஹரிஹரன்
எழுதியவர்:வைரமுத்து
இசை:உத்பால் பிஸ்வாஸ்
வருடம்: 1998



Get this widget Track details eSnips Social DNA



பல்லவி

அழகான காதல் நிலா
அடிவானில் வாவென்றதே

அடிவானில் நான் ஏறினேன்
கடலோடு அது வீழ்ந்ததே

கடலோடு நான் மூழ்கினேன்
கரை சேர்ந்த அலையானதே

அழகான காதல் நிலா
அடிவானில் வாவென்றதே

சரணம் 1

நம் பூமி கடல் போன்றது
நம் வாழ்வு அலை போன்றது

நம் காதல் உறவானது
அலை மீது குமிழ் போன்றது

குமிழோடு குடியேறவே
குறை நெஞ்சு கூத்தாடுது-அழகான

சரணம் 2

அலைகின்ற பூங்காற்றிலே
அவள் சுவாசம் நான் தேடவோ

அழிகின்ற மணல் மேட்டிலே
அவள் பாதம் நான் காணவோ

கண் தூங்க முடியாமலே
கனவோடு நான் வாழவோ-அழகான