பாடல்: பூ வாசல் திறந்தால் பாடியவர்கள்: திப்பு, கூவை நந்தன்,சாகர்,நவீன்,ரோஹித்,அனிதா,கௌதம் இசை:கார்த்திக் எழுதியவர்: அரூர் புதியவன் தயாரிப்பு: ஹபீப் இயக்கம்: புஹாரி வருடம்: 2007 பல்லவி பூ வாசல் திறந்தால் வாசம் மயக்கும் வாழ்க்கை இனிக்கும் போர் வாசல் திறந்தால் வாழ்க்கை எரிக்கும் ஜீவன் மரிக்கும் இதயமெல்லாம் இணைந்திடும் நாளெல்லாம் என் பகைமை வீழாதோ அதிசயமாய் அகிலமும் மாறியே அமைதியிலே வாழாதோ ஓ - மனித மனமே மடியும் இனமே மயக்கம் தெளிவாய் போர், உலகில் வெறியும் எரியும் வரையில் தினமும் அழிவாய்(முனைவாய்) சரணம் ஒரு ஜீவன் உயிர் வாழ நீ பாதை காட்டினாய் முழு உலகம் உயிர் வாழ வகை செய்தோன் நீயே இது உனக்கு இது எனக்கு என பிரிக்கும் உலகம் ஒன்றானால் நன்றாகும்; நம் துன்பம் நீங்கிடும் ஒரு நாட்டை ஒரு நாடு களவாடும் பிழை தான் இதனாலே மண்மேலே தினம் கண்ணீர் அலை தான் எது புனிதம் எதில் புனிதம் என தேடும் மானிடா இவ்வுலகில் மனிதனைப் போல் ஒரு புனிதம் ஏதடா இணையங்களால் இணைந்திடும் மானிடா இதயங்களால் இணைவோம்-வா எரிந்திடுதே அனுதினம் உலகமே அன்பினில் நீ நனைவாயா போர் போதும் தோழா மனிதம் வாழ வைப்போம் ஓர் தாயின் மக்கள் ஒன்று சேர்ந்து நிற்போம் ஒன்றாவோம். |
Wednesday, January 13, 2010
PICTURE OF BLOOD-பூ வாசல் திறந்தால்
Subscribe to:
Post Comments (Atom)
Really Superb Song friend.. Keep Posting more songs... Good work
ReplyDelete