Wednesday, January 13, 2010

S5-இசை-நினைத்தால் முடியாதா

பாடல்: நினைத்தால் முடியாதா
பாடியவர்கள்: பென்னி தயாள், அனைதா, அர்ஜூன், பார்கவி, ஸ்வேதா
இசை: பிரவின் மணி
வருடம்: 2004

Get this widget
Track details
eSnips Social DNA



பல்லவி-1

நினைத்தால் முடியாதா
சிறு மூங்கில் தான் குழலாகின்றதே

நினைத்தால் முடியாதா
பல துளி சேர்ந்தாலே
ஒரு கடலாகின்றதே

இரவும் காத்திருந்தால்
காலையாகுமே

பிறை ஒன்று ஒன்றாய் சேர்ந்தே
ஒரு பௌர்ணமி ஆகுமே

பல்லவி-2

வானம் வீழ்ந்தால்
அதை ஏந்திக் கொள்வோமே

ஒரு பூமி ஒரு வாழ்க்கை
வாழ்ந்து பார்ப்போமே

காற்று நின்றால்
அதை வீச செய்வோமே

தினம் தோறும் புது நாளாய்
மாறிப் போகும் நீ நினைத்தாலே

சரணம்-1

நினைத்தால் ஒரு பாறைதான்
புதிதான சிலையாகின்றதே

நினைத்தால் அந்த வானம் தான்
அறிவாலே வசமாகின்றதே

வார்த்தை காத்திருந்தால்
கவிதையாகுமே

மலர் ஒன்று ஒன்றாய் சேர்ந்து
புது மாலை ஆகுமே-வானம்

[Hey I got something to tell you all

cos i hav been thinkin abt d damn
we had to rule in our heads... just checkin

i got this feelin sinkin
deep wid my plans... do breakin

feelin like we back to have it again
we gotta listen to our hearts
cos im clearing again

i hav been sinkin
and u know
abt these things in my mind
and u know that im dying]

சரணம்-2

உன்னை அறிந்தாலே
வாழ்க்கையே இன்பமே

வாழத் தெரிந்தாலே
பூமியே இன்பமே

பூமி சிரித்தாலே
யாவுமே இன்பமே

என்றும் இன்பம் காண்போமே-வானம்

No comments:

Post a Comment