Wednesday, January 13, 2010

S5-இசை-மலரே மலரே

பாடல்: மலரே மலரே
பாடியவர்கள்: பென்னி தயாள், அனைதா, அர்ஜூன், பார்கவி, ஸ்வேதா
இசை: பிரவின் மணி
வருடம்: 2004








மலரே மலரே




SS Music தொலைக்காட்சியின் போட்டி ஒன்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பாடகர்கள் இணைந்து உருவாக்கியது தான் S5 என்ற இசைக்குழு.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இதில் எவருமே தமிழ்நாட்டைச் சார்ந்தவரல்ல.

மலரே... மலரே பாடல் நிச்சயம் அருமையான பாடல் தான். ஆனால் அந்த பாடலின் மெட்டு Chris De Burgh ன் ஆங்கில பாப் பாடலான When Winter Comes என்பதன் மறுபதிப்பு என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

When Winter Comes


பல்லவி

மலரே மலரே
ஒரு நாள் அழகே

உலகின் சிறு தேனீ
மறந்தால் வசந்தமே

மழையே மழையே
இதமான தூறலே

இதயம் நனைந்தாலே
அதில் ஓர் இனிமையே

மலரே மலரே
மழையே மழையே

இனிமை சுகமே
அழகே...
இயற்கை கவிதையே... கவிதையே

சரணம்-1

நதியே நதியே
நடந்தால் இசையே

சலங்கை அணியாமல்
நடனம் நடக்குதே

நிலவே நிலவே
முகம் காட்டும் பாவையே

இரவை அழகாக்கும்
இளமை அழகியே

மலரே மழையே
நதியே நிலவே

இனிமை சுகமே
அழகே...
இயற்கை கவிதையே... கவிதையே

சரணம்-2

பனியே பனியே
உலகின் திரையே

விழுந்தால் பறந்தோடும்
கனவின் உருவமே

காலை மாலை மாற்றம்
அந்த வானின் மாயஜாலம்

இளம் பூக்கள்
ஆடும் ஆட்டம்
அழகே... இயற்கையே

மலரே மழையே
நிலவே நதியே

பனியே மலரே
அழகே...
இயற்கை கவிதையே... கவிதையே

No comments:

Post a Comment